ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் !
கண்ணன் வந்தான் ! கண்ணன் வந்தான் ! கண்ணன் வந்தான் !
வண்ண கரகோஷம் காற்றினிலே காதுநிறை கேட்கிறது
எண்ணற்ற மக்கள் கூடி களிககின்றனர் தெரு வீதியிலே!
பண்ணை முதல்வரும் பலரும் சேர்ந்துள்ளார் பணிவோடு,
திண்ணையிலிருந்தே ரசிக்க வேண்டியநாள் வந்து விட்டதே !
மண்ணில் பிறந்த மணி வண்ணன்
கண்ணுக்கு இனிய அழகு திண்ணன்!
வெண்ணை தின்று மயக்கிய சிறு பாலன்
விண்ணுலகில் அவதரித்தது நம் புண்ணியமே !
குழந்தை பருவத்தில் நம்மை முழுதும் கவர்ந்தான் அச்சிறுவன்
விழுந்து அடித்து கொண்டு விளையாடினோம் அவன் திரு நாளன்று
இளமை வந்ததும் தணியவில்லை நம் தாகம் உற்சாகம்!
எழுந்து ஓடி கண் கட்டி முறியடிக்க முயற்ச்சி செய்தோம் !
பழைய எண்ணங்கள் எல்லாம் பசுமையாய் நிலை நிற்கிறதே !
அடி பணிந்து மன மகிழ்ந்து அவன் புகழ் பாடிடுவோம்
வடிவை வணங்கி விரும்பி வரன் வேண்டிடுவோம்
படியேறி முடிவு வரும் நாள் அவனோடு சேர்ந்திடவே !!
ஓம் சாந்தி , ஓம் சாந்தி , ஓம் சாந்தி !!
இப்படிக்கு பணிவன்புடன் அடியேன்
பெ ந சு மணி
No comments:
Post a Comment