Tuesday, October 27, 2020
SURPRISE GIFT FROM திருமீயச்சூர்( T.N)
திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசத்தி பெற்றது.
திருமீயச்சூர் திருமீயச்சூர் நெய்க்குள் தரிசனம்* திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசத்தி பெற்றது. கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையைப் பரப்பி, அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைத்திடுவர்.சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால், அலங்கரிக்கப்பட்டஅம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும்.இதனை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயிலில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம் இது.
PL HAVE THE DIVYA DARSHAN திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் AND GET BLESSED
( THANKS FOR THE PHOTO FROM SHRI S.SUNDAR MADURAI )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment