Friday, October 6, 2023
அம்பிகைபிரஹன்நாயகி.( jai Mata Ti
மிகவும் பழமையான தொண்மையான கோயில்.
இங்கே கோயில் கொண்டிருக்கும் ஆடவல்லீசுவரர் பெருமானின் லிங்கத் திருமேனி அம்பிகையே செய்து வழிபட்ட சிறப்புக்கு உரியது. அம்பாளின் திருப்பெயர் பிரஹன்நாயகி.
கர்வத்தால் வித்யைகளை மறந்து, கலங்கித் தவித்த குருபகவான் இங்கு வந்து வழிபட்டு தீர்வு பெற்றாராம். அவருக்கு சாப விடுதலை தந்த ஈசன் இங்கே தென் திசை நோக்கி அருள்வதால், இத்தலத்துக்கு வந்து வழிபடுவோருக்குப் பிணிகளின் பாதிப்புகள் நீங்கும்; ஆயுள் பலம் பெருகும். குருபலம் இன்மையால் திருமணத்தடை ஏற்பட்டுள்ள அன்பர்கள் வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட விரைவில் அவர்களது இல்லங்களில் மங்கல ஒலி கேட்க அருள்புரிவார் ஆடல்வல்லீசுவரர்.
பெரும்பாலும் சிவத்தலங்களில் தெற்குநோக்கி அருளும் தட்சிணாமூர்த்தி இங்கே மேற்கு நோக்கி அருள்வதும் தனிச் சிறப்பாகும்.
மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைக் காண, குரு பெயர்ச்சி அன்று செல்ல வேண்டிய மிக சிறந்த கோவில் இது.
முன்னூர் ஆடவல்லீஸ்வரர் ஆலயத்தில் வேறோர் அற்புதமும் உண்டு. அது, தாமரை மொட்டுக்களை தனி வேலாக்கிய முன்னூா் முருகனே ஆவார்.
1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment