Sunday, October 13, 2024

சீனிவாச பெருமாள் மணந்து கொண்டார்

இன்று ஊரப்பாக்கம் பத்மாவதி ச சீனிவாச பெருமாள் கோவிலில்(visit Google MAP with our Review) பகவான் சீனிவாசர் தாயாரை மணந்து கொண்டார் மணந்து கொள்வதற்கு முன் மணப்பெண் தாயார் தன் கோத்திரத்தை மாற்றிக்கொண்டு பாரத்வாஜ் கோத்திரத்துக்கு குதித்து விட்டார் பகவான் சூரிய கட்டாரியுடன் கட்சியளிக்கிறார் மக்கள் விேிக்கின்றனர் பக்தர் சிறு பையன் ஒருவர் திரு சூரணம் இட்டுக்கொண்டு பகவானே ிக்கிறார் நமோ வெங்கடேசாய CAMERA? PHOTOS BY KARTIK RAJA

Friday, September 27, 2024

P A N C H A N G

I need not elaborate the importance of Panchnagam and getting a lucky day when y see in the Morning after a whole night sleep. There were only few panchngs like " Pampu Panchang" a famous one. recent days ( presently KROTHI) such panchanggs have increased? 2 such publications are ready now, If u use any of the these 2 Pl put ur comments

Tuesday, September 24, 2024

சாப்பிடு சாப்பிடு சாப்பிடு

: சமீப காலமாக திருப்பதியில் லட்டு அதில் மாட்டுக் கொழுப்பு பற்றி பல பதிவுகளும் நேரடி காணலும் வந்து கொண்டிருக்கின்றன இதில் உண்மை என்னவென்றால் சில உண்மைகள் தெரியப்படுத்தவில்லை அது பார்ப்பதற்கு: வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் அதுவும் உண்மையே அது பற்றி ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகள் காணலாமா நான் வழக்கமாக சண்டையிடும் எனது நெய்பர் கார் பார்க்கிங்கில் சுமார் 15 நாள் முன்னாடி மீண்டும் சண்டை போட்டார் கடைசியாக சண்டியர் என்ற முறையில் என்னை மாட்டுக் கொழுப்பு சாப்பிடுவ நே என்று திட்டினார் அவருக்கு நான் ஒரு பியூர் வெஜிடேரியன் என்று தெரிந்தும் இப்படி திட்டியது ஏன் ஆச்சரியமாக இருந்தது சிறிது யோசித்தேன் முதல் நாள் அவர் முன்னாடி தான் எனக்கு தெரிந்தவர் ஒரு லட்டு கொடுத்தார் ஆம் திருப்பதி லட்டு தான் இப்போது புரிந்ததா

Friday, September 20, 2024

Raya Baro. ( shrarth Karo)

தாம்பரம் கன்னடபாளையம் ராயர் மடம் என்பது பழமையான சத்தியநாராயணன் மற்றும் அனுமன் சிலைகள் மற்றும் ராயர் பிருந்தாவனம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு இந்து மத்வா கோயிலாகும். அர்ப்பணிப்புடன் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஷ்ராத்தம் செய்ய ஏற்ற இடம். தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது. அருகிலுள்ள உள்ளூர்வாசிகள் வருகை தந்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். Tomorrow 22/9/24 is Mahabarani day Many Many kartas waiting for this holy day to conduct Pitru paksha. Bus stop 18S 18H 55 B S 84 Stop Kannada palayam Donate liberally Feel happy with developements

GANAPATHY Paupa looking at u

say ganapathy paupa morya and get blessed by him

Wednesday, September 18, 2024

மிகவும் சிறந்தது, மிகவும் பிடித்தது (கோவிந்தா)

( sourse and credit Mahavishnu info) திருப்பம் தரும் திருப்பதி பெருமாள் மூல மந்திரம் ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய” எப்படி ஜெபிக்க வேண்டும்? இந்த அற்புத மந்திரத்தை திங்கட் கிழமை தோறும் 108 முறை உச்சரிப்பதால் நல்ல பலனைப் பெற்றிடலாம். திருமாலுக்குப் பிடித்த திருநாமம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா அகில உலகங்களையும் காத்து இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று நாளும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்து கொண்டிருப்பவரை ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ மஹாவிஷ்ணு என்றெல்லாம் துதித்து, அவரை 100, 1000, லட்சம் அல்லது கோடி திருநாமங்களால் போற்றி கொண்டாடுகிறோம் அல்லவா.? இத்தனை திருநாமங்களில் இவருக்கு மிகவும் பிடித்தமான திருநாமம் எது என்பதையும் ஏன் அவருக்கு அந்த நாமம் பிடித்திருக்கிறது என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்வோம். வாருங்கள்..... பெருமாளுக்கு பிடித்தமான (பெயர்) நாமம் திருமாலுக்கு கோடி நாமங்கள் சொல்லி போற்றுகிறோம். அவற்றுள் பிடித்தது லட்சம் நாமங்கள். அவற்றுள் பிடித்தது சஹஸ்ர நாமங்கள், அந்த சஹஸ்ர நாமங்களில் பிடித்தது அஷ்டோத்தர சத நாமங்கள். இவற்றுள் பன்னிரெண்டு நாமங்கள் சிறந்தவைகளாகும் அந்த 12 நாமங்கள்: 1) கேசவா 2) நாராயணா 3) மாதவா 4) கோவிந்தா 5) விஷ்ணு 6) மதுசூதனா 7) திரிவிக்ரமா 8) வாமணா 9) ஸ்ரீதரா 10) ரிஷிகேஷா 11) பத்மநாபா 12) தாமோதரா ஆகும். இந்த பன்னி ரெண்டு திருநாமங்களிலும் திருமாலுக்கு மிகவும் சிறந்தது, மிகவும் பிடித்தது என்று சொல்லப் படுவது கோவிந்தா என்னும் திருநாமம் தான். ஏனெனில் இந்த கோவிந்தா என்ற திருநாமத்திற்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகள்: 1) கோ - கடலுக்குள்ளே மறைக்கப்பட்ட வேதங்களை மீட்டெடுத்ததால் கோவிந்தா என அழைத்தனர். 2) கோ - பர்வத மலை தரையில் புதையாமல் காத்தவர் என்பதால் கோவிந்தா என அழைத்தனர். 3) கோ - நிலைமாறிய பூமியை நிலைபெறச்செய்த வர் என்பதால் கோவிந்தா என்றனர். 4) கோ - சனகாதிகள் மற்றும் சப்தரிஷிகள் வேண்டுகோளின் படியும், நரசிம்மர் தோற்றத்தின் போது பக்தனின் சொன்ன சொல் காக்கவும் வந்தவர் என்பதால் கோவிந்தா என்றனர். 5) கோ - விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து மண்ணிலிருந்து விண்ணை அளந்து நின்றதால் கோவிந்தா என்றழைத்தனர். 6) கோ - க்ஷத்திரியர்களை அடக்கியவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர். 7) கோ - ஆயுதங்கள், 50 வகையான அஸ்திரம்,சஸ்திரம் உள்ள வானூர்தியை இந்திரனால் பெறப்பட்டவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர். 8) கோ - சமுத்திரத்தை கலக்கி பூமியைக் கிழித்தவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர். 9) கோ - மஹாலட்சுமி திருமாலிடம் கோபித்துக் கொண்டு சென்றுவிட அனைத்து சம்பத்துக்களும் இழந்த நிலையில் திருமால் தன் வைகுண்டத்தை விட்டு ஸ்ரீநிவாசராக பூமியில் எங்கெங்கோ சுற்றி திரிந்து பசி களைப்பில் ஒரு முனிவரிடத்தில் அவரிடமிருந்த பசுக்களில் ஒரு பசுவை அதன் பாலை அருந்தி தன் பசியை போக்கிக் கொள்ளும் பொருட்டு தனக்கு தானமாக தரும்படி வேண்ட முனிவரும் நீங்கள் யார் எப்படி இங்கு வந்தீர்கள் என்பதை வினவ மிருந்த பசி களைப்பில் தான் யாரென்றே தெரியாவில்லை என்றபடி பதில் அளிக்க சரி பரவாயில்லை இங்கேயே இருங்கள் என்று உள்ளே சென்று நீர் நிறைந்த செம்பை எடுத்து வருவதற்குள் ஸ்ரீநிவாசர் தன்னை கலி துரத்தி வருவது போல் உணர அவர் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கிறார். அப்போது வெளியே வந்து பார்த்த முனிவர் ஐயா கோ(பசு) இந்தா, கோ இந்தா, கோ இந்தா என்று பின்னா லேயே முனிவர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே செல்ல அந்த முனிவர் கூறிய வார்த்தை ஸ்ரீநிவாசருக்கு 'கோவிந்தா' என்று காதில் விழுந்தது. முனிவரின் கோவிந்தா என்று அழைத்த அந்த வார்த்தையே தனக்கு பிடித்தமானதாக கருதியதால் அனைவரும் கோவிந்தா என அழைத்தனர். அதுமட்டுமல்ல பசுக்களை ரட்சிப்பவர் என்பதாலும் கோவிந்தா என்றனர். 10) கோ - கலியுக தோஷம் நீக்குபவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர் 11) கோ - விருப்பு, வெறுப்பின்றி அனைவரையும் காத்து ரட்சிப்பவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர். 12) கோ - வல்வினையை போக்கி வருவினையை தடுத்து காத்தருளும் ஆற்றலை உடையவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர். ஆக இப்படிப்பட்ட மகிமை பொருந்திய மந்திரச் சொல்லாக "கோவிந்தா" என்பது பெருமாளுக்கு அந்த திருமாலுக்கு மிகவும் பிடித்தமானதாகும். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா குறையொன்றுமில்லை கோவிந்தா கோவிந்தம் பரமானந்தம் கோவிந்தம்🌹