காஞ்சிபுரம்:''காஞ்சி அத்தி வரதர் வைபவத்தில், கடைசி இரண்டு நாட்களான வரும், 16, 17ம் தேதிகளில், வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 16ம் தேதி, காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை,'' என, கலெக்டர், பொன்னையா தெரிவித்துள்ளார்.
மூன்று லட்சம்காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நின்ற கோலத்தில் எழுந்தருளி உள்ள அத்தி வரதரை, நேற்று மட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர். இந்த கூட்டத்தால், டி.கே., நம்பி தெருவில், சாலை நிரம்பியது.
சுவாமி தரிசனம் செய்ய, 10 மணி நேரத்திற்கும் மேல் ஆனதால், பொது தரிசன வரிசையில் நின்ற, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரத்னம், 67, என்பவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டது.இதையடுத்து அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இறந்தார். அதே போல், கூட்ட நெரிசலில் சிக்கி, 15 பேர் மயக்க மடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்து வரும் நாட்களில், அதிக கூட்டம் வரும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர், பொன்னையா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:அத்தி வரதரை தரிசிக்க, நேற்று முன்தினம், 3.2 லட்சம் பேர் வந்ததால், நேற்று அதிகாலை, 2:00 மணி வரை, தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. திங்கட்கிழமை வரை, 49.5 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து உள்ளனர்.எவ்வளவு கூட்டம் வந்தாலும், அதிகபட்ச தரிசன நேரம், 21 மணி நேரம். அதாவது, அதிகாலை, 2:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
பக்தர்கள் வசதிக்காக, கோவிலில் இருந்து வெளியே வரும் மேற்கு கோபுர பகுதியை விரிவு படுத்த உள்ளோம்; வி.ஐ.பி., தரிசனத்தில், கூடுதல் சாரம் கட்ட உள்ளோம்.வரும், 16ம் தேதி, காஞ்சிபுரம் நகரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.அதேபோல், 16 மற்றும் 17ம் தேதி, 'டோனர் பாஸ்' மற்றும் வி.வி.ஐ.பி., பாஸ் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
மூடப்படும்அத்தி வரதர் வைபவத்தின் கடைசி நாளான, 17ல், மதியம், 12:00 மணிக்கு, கிழக்கு கோபுர கதவு மூடப்படும். 12:00 மணிக்குள் கோவிலுக்குள் வந்த பக்தர்கள் அனைவரும் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.அன்று மாலை, 5:00 மணிக்கு, அத்தி வரதர் வீற்றிருக்கும் வசந்த மண்டபம் நடை சாத்தப்படும்.வரும் நாட்களில், அதிக பக்தர்கள் வரலாம் என்பதால், முத்தியால்பேட்டை, வந்தவாசி சாலை, கீழம்பி ஆகிய இடங்களில், வாகனங்கள் நிறுத்த, மூன்று பெரிய இடங்கள் ஏற்படுத்த உள்ளோம்.
வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டு, அங்கிருந்து அவர்களை பஸ்சில் ஏற்றி, கோவிலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு, 7மணிக்கு மேல், சென்னைக்கு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றும் போலீஸ் மற்றும் பிற துறை அலுவலர்களுக்கு, சம்பளத்தில் இரட்டை படி கிடைக்க கருத்துரு தயாரிக்கப்படுகிறது. அனந்த சரஸ் குளம் துார் வாரும் பணி, இரு நாட்களில் முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

போலீசுக்கு எச்சரிக்கை
பக்தர்கள் அதிகமாக வருவதால், தற்போதுள்ள, 7,500 போலீஸ் எண்ணிக்கையை,12 ஆயிரமாக அதிகரிக்க உள்ளோம். சில இடங்களில்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில், பக்தர்கள் வருகின்றனர்.நேற்று மட்டும், 25 ஆயிரம் வாகனங்கள், காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளன. வி.வி.ஐ.பி., நுழைவாயிலில், பாஸ் இல்லாமல், கோவிலுக்குள் அனுமதிக்கும்போலீசார், உயர் அதிகாரிகள் என, யாராக இருந்தாலும், அவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயந்த் முரளி, ஏ.டி.ஜி.பி.,
Adv
No comments:
Post a Comment