Saturday, August 3, 2019

MA CAUVERY IN 1954 THANKS VANDYA DEVAN ( DINAMAR READER)

ஒரு காலத்தில் வறட்சி மாநிலமாக இருந்த மராட்டிய மாநிலத்தில்..... மும்பையில் வரலாறு காணாத மழை...? இதே நாளில்... இந்தியாவின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான காவேரி வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது... இதே காவேரியில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு... ஆடி பெருக்கென்று... கும்பகோணம் பாலக்கரையில் படித்துரையின் மேலே சாலையிலிருந்து முதல் படியில் நின்றிருந்தேன்... காவிரி என் காலை தொட்டு சென்ற நீங்கா நினைவு அப்படியே நினைவில் தொக்கி நிற்கிறது... இன்றோ... பாலைவனமாய்... மணற்பரப்பாய்... ? இதெற்கெல்லாம் காரணம்... எரியும் கொள்ளிக் கட்டையை தன் கையாலே எடுத்து... தன் தலையிலேயே தேய்த்துக் கொள்ளும் இன்றைய மனித இனத்தின் பேராசைதான்... தனிமனித ஒழுக்கமின்மை... இயற்கையை புறந்தள்ளி, தான்தான் இயற்கையை கட்டுப்படுத்துபவன் என்கின்ற ஆணவம், அனைத்து செயல்களிலும் இயற்கைக்கு எதிராகவே செய்தல், இயற்கையை எந்தளவிற்கு நோகடிக்க முடியுமோ... ரணமாக்க முடியுமோ.. அந்தளவிற்கு இயற்கையை நோகடித்து, ரணமாக்கும் இன்றைய மனிதனின் இயல்பு... தன்னை படைத்த இயற்கையையே சோதித்துப் பார்க்கும் இன்றைய மனிதப் பதர்கள்... இன்றைய மனிதன் பிறந்தது முதல் மின்மயானத்தில் எரிக்கப்படும் வரை.. தனது செயல்பாடுகள் அனைத்தும் இயற்கைக்கு மாறாகவே செயல்படுவதும்... நடுவில் “இயற்கை காக்கும் ரட்சகன்”... “இயற்கையை காப்போம்”... “மரம் நடுவோம்”.... என்று கூவிக் கொண்டே... இயற்கையின் குரல்வளையை நெறித்தல்... இயற்கையை எரித்தல் போன்ற நடிக்கும் இன்றைய மனிதனின் ஆணவத்தாலும், அகந்தையாலும், திமிராலும், தான்தோன்றித்தனத்தாலும், தலைக்கணத்தாலும்... இன்றைய மனிதன்..... தன் சந்ததிகளின், வாரிசுகளின் தலையில் கொள்ளி வைத்துவிட்டு செல்கிறான் என்பதே உண்மை.... நல்லவேளை.... என் முன்னோர்களும், பெரியோர்களும் காட்டிய வழியில்.. இயற்கையை மதித்து, அதனுடன் உறவாடி... நான் எனது ஆயுளில் சரிபாதியை கடந்துவிட்டேன்... இன்றைய இளைஞர்கள்... நாளை முதியவர்களாக இருப்பார்களா...? என்பது சந்தேகமே...? ஏனெனில் அதுவரை இயற்கை இந்த மனிதகுலத்தை விட்டு வைக்காது... காரணம்... அந்தளவிற்கு தன்னை படைத்த இயற்கையின் கர்ப்பப்பையே... அறுத்தெரியும் செயல்களில் இன்றைய மனிதகுலம் ஈடுபட்டு வருகிறது... அதன் பலனை அனுபவித்துதானே தீர வேண்டும்..


A DEEP AND PAINFUL WRITE UP. THANKS MR VANDYA DEVAN. U ARE VERY CORRECT

No comments:

Post a Comment