Sunday, January 10, 2021
வெண் குடி என்பது வாலாஜாபாத் டு காஞ்சிபுரம் பஸ் ரூட் சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் உள்ளது இது ஒரு பழைய கிராமம், இங்கு ஒருஆலயம் உள்ளது, பிராசீன் ஆலயம் காமாட்சி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்தின் சிறப்பு பழைய தலைமுறை அமைப்பு மற்றும் , முறைகள். உதாரணமாக நந்தி வழியாக சிவ பகவானை காண ஜன்னல் துவாரம் உள்ளது இப்பொழுது பிரதோஷம் & இந்த கோவிலை தரிசிக்கிறார்கள் எனவே துவாரம் வழியாக மூலஸ்தானத்தை பாருங்கள் இதே முறையில்தான் சிவ பகவானை நாம் பார்க்கவேண்டும் சிவ பகவானை பார்க்கும்போது நந்தியை பார்த்துவிட்டு திரும்பி விட வேண்டும் நந்தியே சுற்றக்கூடாது அதாவது சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடுவில் நீங்கள் செல்லக்கூடாது முக்கியமாக இது பிரதோஷத்தில் அனுசரிக்க படவேண்டியது .அபிஷேகம் முடிந்தவுடன் அலங்காரம் செய்யப்பட்டது சுவாமியும் லோகநாயகி கோவிலை வலம் வந்தனர் இந்தப் வலப்பாதையில் மற்ற சிவகணங்கள் அதாவது கணபதி முருகர் தக்ஷிணாமூர்த்தி துர்கை சண்டிகேஸ்வரர் முதலில் இவர்கள் முறைப்படி இருக்கின்றன இது தவிர மிகவும் விசேஷமான ஒன்று தியான மண்டபம் இதன் பெயர் சித்தர் தியான மண்டபம் அகஸ்தியர் மற்றும் பாம்பாட்டி சித்தர் நடுவில் சிவ பகவான் தியானலிங்கம் என்று பெயர் பெற்று வீற்றிருக்கிறார் இது கண்டிப்பாக பார்க்க வேண்டியது ஒன்று மற்றும் இந்த கோவில் வளாகத்தில் ஐயப்பா மற்றும் சாயிநாதருக்கும் தனித்தனி சிறு விமானங்களுடன் கூடிய கருவறைகள் உள்ளன இந்த ஐயப்பா மற்றும் சாயிநாதா இருவரும் பக்தர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய வேறு என்ன வேண்டும் இந்த கோவிலை பார்க்க நீங்கள் காரில் செல்லும்போது வாலாஜா பார்த்து தாண்டி நீங்கள் பிரேக் போட வேண்டும் அவ்வளவுதான் தவிரவும் இந்த கோவிலுக்கு ஒறு குளம், குளத்தில் தாமரை இலைகள் உள்ளன.. நமச்சிவாயா நந்தி வாகனா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment