Monday, March 22, 2021

NIJAROOPA RAGAVENDRAR.

க்ர்ந்தாலாயா என்று அழைக்கப்படும் இந்த சத்குரு ராகவேந்திரர் மடம் உருவம்  மூன்று அடுக்கு மாடி கட்டிடம். கீழ்பகுதியில் நிஜ ரூப ராகவேந்திரர் இருக்கிறார் இது ராகவேந்திரர் சுமார் 4 நூறு வருட காலங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேமாதிரி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய வீணையும் வைத்திருக்கிறார் இந்த ராகவேந்திரரை சுற்றி இன்னும் பலரை பிரதிஷ்டை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன  இந்த மடம் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ரோட்டில் சுமார் பத்து அல்லது பதினோரு கிலோமீட்டர்கள் தொலைவில் பூண்டி நெய்வேலி என்ற இடத்தில் இருக்கிறது இதுதான் மிகவும்  அருகாமை யான பஸ் நிலையம் இங்கிருந்து நீங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் நடையாக செல்லலாம் அல்லது ஆட்டோ ரிக்க்ஷா போன்ற வாகனங்களில் செல்லலாம் ஏற்கனவே சொன்னபடி இந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் கீழ்தளத்தில்நிஜ ரூப ராகவேந்திரர் நடு, தளத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனம் லக்ஷ்மி நரசிம்மர் சந்தனக் கல்  ராம தர்பார் மூன்றாவது தளத்தில் கொடியுடன் கூடிய கோபுரம் இந்த கோபுரத்தை தான் நீங்கள் வலம் வரலாம்வலம் வரும்போது பூண்டி நீர்த்தேக்கத்தை& இயற்கை காட்சிகளை பார்க்கலாம்இந்த கோவில் மிகவும் ஒரு விசேஷ வாய்ந்த கோவில் ஒவ்வொரு அம்சமும் சத்குரு ராகவேந்திர ருடண் சம்பந்தப்பட்டது  அவையாவன குரு சந்தனம் அரைத்த சந்தனக் கல் விஜயதாசருக்கு  நான்கு பகவான்கள் காட்சி அளித்த இடம், சந்தனக் கல்,  ராம தர்பார்  இங்கு விசேஷமானது ( தகவல் பலகை பலகையின் படி) கோபுர தரிசனம். என்பது சுலபம் . கோபுர பிரதக்ஷிணம் என்பது ஒரு கஷ்டமான சமாசாரம் இங்கு அதற்காகவே மாடி கட்டி அங்கு செல்ல சொல்கிறார்கள்! போதும் போதும் நான் இப்பவே கிளம்பி பூண்டி நெய்வேலி செய்கிறேன் என்று கிளம்பி விட்டீர்களா அதுதான் முக்கியம்     

No comments:

Post a Comment