Saturday, April 2, 2022

2 April 2022 SUBAKRUTHU PANCHANG

: சுபகிருது என்கிற கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா போன்ற மாகாணங்களின் புதுவருடப்பிறப்பு பிறந்து விட்டது ஒவ்வொரு புதுவருடப் பிறப்பும் போதும் பஞ்சாங்கம் வாசிப்பதில் சிறந்த விற்பன்னர்களால் கோவில் மடம் ஆகிய இடங்களில் பஞ்சாங்க படனம் என்று சொல்லப்படும் பஞ்சாங்க வாசிப்பு நடக்கிறது நீங்கள் பார்ப்பது நங்கநல்லூர் சத்குரு ராகவேந்திர மடத்தில் நடக்கிறது அங்கு போட்டோ வீடியோ எடுக்க அனுமதி இல்லை இருந்தாலும் பிரத்யேக அனுமதி மூலம் இது தங்களுக்கு அறிக்கை அளிக்கப்படுகிறது இந்த பஞ்சாங்க விற்பன்னர் திருவல்லிக்கேணியில் இருந்து வந்துள்ளார் பஞ்சாங்கத்தின் பல முக்கிய பகுதிகளை ஜனங்களுக்கு விவரித்தார் யுத்தம் பற்றியும் பேசினார் இந்தியாவுக்கு யாதொரு பாதிப்பும் இல்லை முக்கியமான பண்டிகைகள் மற்றும் சத்குரு ராகவேந்திரா மந்திர ஆராதனைதேதி திகளை தெரியப்படுத்தினார் இந்த வருடத்தில் வரும் இரண்டு கிரகணங்களைப் பற்றியும் தெளிவுரை செய்தார் பிறகு பஞ்சாங்கத்திற்கும் தீபாராதனை செய்யப்பட்டது கூடியிருந்த ஜனங்களுக்கு மங்காளட்சதை கல்கண்டு வழங்கினார் பஞ்சாங்கபடணத்தில் உண்மையான நம்பிக்கை வைத்துள்ள ஒரு பக்தர் அவருக்கு சோமன் வேஷ்டி வழங்கினார் மடத்துக்கு வெளியில் எல்லாருக்கும் பருப்பு உசிலி பானகம் மோர் வழங்கப்பட்டது நாம் சுபகிருது வருஷத்தை 2 கரம் கூப்பி மற்றும் கரகோசம் செய்து வரவேற்போம் ராகவேந்திரா பாஹிமாம ராகவேந்திர ரக்ஷமாம்

No comments:

Post a Comment