Tuesday, August 15, 2023
4000 பேருக்கு அன்னதான
சென்னை சாலிகிராமத்தில் ராமர் தெருவில் தசரதபுரம் என்ற ஏரியாவில் உள்ள சங்கரநாராயணன் கோவில் மிகவும் அருமையான கோவில்களில் ஒன்று/ மற்ற சென்னை கோவில்களுடன் போட்டி போட வேண்டிய கோவில் இது சங்கரநாராயணர் என்று சொல்லக்கூடிய விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் சேர்ந்த ஒரு கோவில் நீங்கள் போட்டோவை பார்த்தீர்களா அதில் சிவனும் அதற்குமேல் விஷ்ணுவும் இருக்கிறார் மற்ற அம்பிகைகள் உண்டு மூலஸ்தான பரிக்ரமா ஏரியாவில சங்கரநாராயணனின் கதை சித்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது கண் கவரும் ஒன்று பிரதட்சணம் செய்யும் போதே பகவான் லீலைகளை தரிசித்துக் கொண்டே செல்கிறோம் விஷ்ணு கோவில் என்பதால் ஆஞ்சநேயர் உண்டு/ நவகிரகம் உண்டு /மற்றும் லட்சுமி நரசிம்மர் உண்டு மிக மிக விசேஷமான மற்ற கோவில்களில் இல்லாத ஒரு அம்சம் ஸ்ரீ சக்கரத்தில் நாம் உட்கார்ந்து கொள்ளலாம் ஐந்து நிமிடம் தியானம் செய்யலாம் அங்குள்ள அர்ச்சகர் நல்வாக்குப் படி இதற்காக மிகவும் மடியாக இருக்க வேண்டியது இல்லை சாதாரணமாக நல்ல மனதுடன் உட்கார்ந்து கொள்ளலாம் நானும் சிறிது நேரம் தியானம் செய்தேன் என்ன ஒரு பக்தர்கள் மீது அன்பு அவர்கள் முன்னேற வேண்டும் என்று இதெல்லாம் செய்கிறார்கள் எல்லா நட்சத்திரத்திற்கும் பலவிதமான பூஜைகள் உண்டு உதாரணமாக சுவாதி நட்சத்திரம் அன்று லட்சுமி பூஜை மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர் பூஜை போன்றவை வர போகும் வெள்ளிக்கிழமை 18 8 23 அன்று சுமார் வழங்கப் போகிறார்கள் மிகவும் அருமையான காட்சியாக காண்கிறது அதான் சம்பந்தப்பட்ட நோட்டீஸில் அன்னமே சிவன் அன்னமே பிரம்மம் அன்னமே விஷ்ணு என்று வைத்திருக்கிறார்கள் இந்த நிதர்சன உண்மையை பெரிய நோட்டீஸில் தெரியப்படுத்துகிறார்கள் வேறு யார் தெரியப்படுத்துகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment