Monday, August 14, 2023
சங்கரநாராயணனின் கதை
சென்னை சாலிகிராமத்தில் ராமர் தெருவில் தசரதபுரம் என்ற ஏரியாவில் உள்ள சங்கரநாராயணன் கோவில் மிகவும் அருமையான கோவில்களில் ஒன்று/ மற்ற சென்னை கோவில்களுடன் போட்டி போட வேண்டிய கோவில் இது சங்கரநாராயணர் என்று சொல்லக்கூடிய விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் சேர்ந்த ஒரு கோவில் மற்ற அம்பிகைகள் உண்டு
மூலஸ்தான பரிக்ரமா ஏரியாவில சங்கரநாராயணனின் கதை சித்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது கண் கவரும் ஒன்று பிரதட்சணம் செய்யும் போதே பகவான் லீலைகளை தரிசித்துக் கொண்டே செல்கிறோம்
விஷ்ணு கோவில் என்பதால் ஆஞ்சநேயர் உண்டு/ நவகிரகம் உண்டு /மற்றும் லட்சுமி நரசிம்மர் உண்டு மிக மிக விசேஷமான மற்ற கோவில்களில் இல்லாத ஒரு அம்சம் ஸ்ரீ சக்கரத்தில் நாம் உட்கார்ந்து கொள்ளலாம் ஐந்து நிமிடம் தியானம் செய்யலாம் அங்குள்ள அர்ச்சகர் நல்வாக்குப் படி இதற்காக மிகவும் மடியாக இருக்க வேண்டியது இல்லை சாதாரணமாக நல்ல மனதுடன் உட்கார்ந்து கொள்ளலாம் நானும் சிறிது நேரம் தியானம் செய்தேன் எல்லா நட்சத்திரத்திற்கும் பலவிதமான பூஜைகள் உண்டு உதாரணமாக சுவாதி நட்சத்திரம் அன்று லட்சுமி நரசிம்மர் பூஜை மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர் பூஜை போன்றவை வர போகும் வெள்ளிக்கிழமை 18 8 23 அன்று சுமார் 4000 பேருக்கு அன்னதான வழங்கப் போகிறார்கள் மிகவும் அருமையான காட்சியாக காண்கிறது (அன்னமே சிவன் அன்னமே பிரம்மம் அன்னமே விஷ்ணு )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment