சென்னை:சேலையூரில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மந்த்ராலயத்தின் கும்பாபிஷேகம் மற்றும் மூல மிர்த்திகா பிருந்தாவன பிரதிஷ்டை இன்று நடக்கிறது.
தாம்பரம் அடுத்த சேலையூர், மகாதேவன் நகரில், ராகவேந்திர சுவாமி மந்த்ராலயம் கட்டப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேகம் மற்றும் மூல மிர்த்திகா பிருந்தாவன பிரதிஷ்டை இன்று நடக்கிறது.கும்பாபிஷேகத்தை, நஞ்சங்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி, ஸ்ரீ சுப தீர்ந்திர தீர்த்த சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, நாதஸ்வர கச்சேரி, அன்னதானம், ராகவேந்திர சுவாமி திரைப்படம் திரையிடப்பட்டது.இரண்டாம் நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு பிரதிஷ்டா ஹோமம் நடந்தது. மாலை, மங்கள இசை மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தன. இரவு, 8:30 மணிக்கு சுவாமிகள் அருளுரை மற்றும் அன்னதானம் நடந்தது.
கும்பாபிஷேக நாளான இன்று காலை பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு கலசங்களுக்கு கும்பநீர் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, புதிய மடத்தின் ஸ்தாபகர் கரிகாலன், பல்லாவரம் குருமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர். thank u Dinamalar
======================
U MAY ALSO VISIT MY BLOGS FOR MORE DETAILS
ALSO PL VISIT YOU TUBE NARAYANAN VENKATESAN
THANKS DINAMALAAR FOR FREE COPIES TO DEVOTEES
No comments:
Post a Comment