Tuesday, April 14, 2020

வேப்பம்பூ பச்சடி & காஞ்சிப்பெரியவர் (THANKS DINAMALAR)

ஒருமுறை காஞ்சிப்பெரியவர் புத்தாண்டன்று உணவில் இடம் பெறும் வேப்பம்பூ பச்சடி பரிமாறுவது குறித்து பக்தர்களுக்கு விளக்கினார்.

“ வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, நெய் ஆகிய ஐந்தும் பச்சடியில் இடம் பெற வேண்டும். பேருக்கு கொஞ்சமாக வைக்காமல், அதிகமாக செய்வது அவசியம். முதலில் அம்பிகைக்கு ஒரு கிண்ணம் நிறைய வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். அப்போது என்ன கோரிக்கை வைத்தாலும் அவள் நிறைவேற்றி வைப்பாள்.

அடுத்ததாக கணவருக்கு கொடுத்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அதன் மூலம் ஆண்டு முழுவதும் கணவரின் அன்பு பூரணமாக கிடைக்கும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் ஒவ்வொரு கிண்ணம் கொடுப்பது அவசியம். இதனால், நீங்கள் சொல்லும் வேலைகளை அக்கறையுடன் செய்வர். இதன் பிறகே, குழந்தைகள், பெண்கள் பச்சடியை சாப்பிட வேண்டும்” என்றார்.

வெற்றி மேல் வெற்றி

புத்தாண்டின் ராஜாவாக புதன் இருக்கிறார். அவருக்கு அதிதேவதையான மகாவிஷ்ணுவை ஆண்டு முழுவதும் வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வரும். புதனன்று அதிகாலையில் நீராடி நெய்தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது நல்லது.

இன்றே நல்ல தீர்வு
'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க இன்றே ஓடி வருபவர் நரசிம்மர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்மர். பிரகலாதன் என்னும் பக்தனை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்.

அசுரனான இரண்யனிடம் அவனது மகன் பிரகலாதன், ''பரம்பொருளான மகாவிஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்றான்.. மகன் காட்டிய துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். அதில் இருந்து கர்ஜித்தபடி சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக நரசிம்மர் அவதரித்தார். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து கொண்டார். இவர் அவதார தினமான நரசிம்ம ஜெயந்தி இந்த ஆண்டு மே 6 ல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சுவாமிக்கு பானகம் படைத்து வழிபட நீண்ட கால பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

தீர்க்காயுசுடன் வாழுங்க!

சித்ரா பவுர்ணமியன்று கையில் ஏடும், எழுத்தாணியுமாக அவதரித்தவர் சித்ரகுப்தர். உயிர்களின் பாவபுண்ணிய கணக்கை நிர்வகிக்கும் கணக்கராக இருப்பவர் இவரே. கேதுவின் 

No comments:

Post a Comment