Thursday, December 2, 2021

KALLIDAI ( SOUTH PAPANKUMAM) VISIT AND GET BLESSED

28.11.2021 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை 12ஆம் தேதி கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை வீரபத்திர சுவாமிக்கு மிகவும் உகந்த நாள். வீரபத்திரர் என்றதும் உரித்துப் பார்க்கும் பெரும் விழிகளும் முரட்டு மீசையும் கைகளில் ஆயுதங்களும் தாங்கியவர் ஆக பல திருக்கோவில்களில் சிலா ரூபங்கள் பார்த்தது நினைவுக்கு வரும். ஆனால் அருள்வதில் அன்னையை விட இனிமையானவர் வீரபத்திரர். நமது திருக்கோவிலில் வீரபத்திரர் வழிபடும் பக்தர்களுக்கு சாந்தமாகவும் அவர்களின் துன்பங்களுக்கு அகோர மூர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். பத்ர என்ற சொல்லுக்கு மங்கலம் இனிமை வளம் சிறப்பு என பல பொருள் உண்டு இவை அனைத்தையும் வழங்க கூடியவராக விளங்குகிறார் வீரபத்ர பெருமாள்.
இவருக்கு உகந்த பூஜை நாட்கள் அமாவாசை பவுர்ணமி சித்திரை மாதம் முதல் செவ்வாய் கார்த்திகை ஞாயிறு ஆடி பூரம் மாசி சிவராத்திரி தமிழ் வருடப்பிறப்பு செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் ஆகிய நாட்கள் இவரை வழிபட சிறந்த நாட்கள் ஆகும். அன்பிற்கும் பக்திக்கும் மட்டுமே இவர் கட்டுப்படுவார் வணங்குவது ஒன்றினால் மட்டுமே இவரை திருப்திப்படுத்த இயலும். புத்திர விருத்தி சகோதர பலம் மன உறுதி செவ்வாய் தோஷம் நீங்கும். உள்ளன்புடன் வழிபடும் பக்தர்களை தேடிவந்து அருள்பவர் வீரபத்திரர் எல்லா நாட்களில் முடியாமல் போனாலும் கார்த்திகை ஞாயிறு அவருக்கு பூஜை செய்வது மிகுந்த பலன்களை கொடுக்கும்

No comments:

Post a Comment