Friday, April 9, 2021

அருமையான கிராமம் ( முதலமைச்சர் கெஜட்)

: அம்பாசமுத்திரம் 2 பொட்டல்புதூர் வழி இடைகால் சாலையில் ஒரு சிறிய அருமையான கிராமம் அமைந்துள்ளது அதன் பெயர் முன்னிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் கெஜட் உத்தரவுக்கு பின் கூட மாற்ற முடியாமல் இருக்கும் ஒரு ஒரு அருமையான பெயர் உள்ள இடம் அதுதான் வடக்கு பாப்பான்குளம் இந்த அருமையான இடத்தில் உள்ள திருவெண்காடர் மற்றும் சிறிய கோவில்கள் சுப்ரமணிய சுவாமி முப்பிடாதி அம்மன் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் போன்றவைகளை போட்டோக்கள் மூலமும் வீடியோ மூலமும் பிளாக்கள் (எக் ஸ்குலிஸ்வ் மூலமும் தெரிய படுத்திவிட்டேன் இன்று சொல்வது மருந்தீஸ்வரர் கோவில் பற்றி இதுவும் பழமையான சிவன் கோவில் பல முக்கியத்துவம் வாய்ந்தது ஆனால் தமிழ்நாட்டின் சிதிலமடைந்த கோவில்கள் என்று பட்டியலிட்டால் இது முதலில் இடம்பெறும் எனறு தங்களுக்கு தெரியாது நீங்கள் வலம் வந்தா பாதி தூரம் தான் வர முடியும் பாதி தூரத்திற்கு பின் புதர் மண்டி இருக்கிறது பூச்சிகள் இருக்கக்கூடும் சிவனுக்கு இரவில் பாதுகாப்பாக இருந்த நாகம் நாம் வலம் வரும் வழியில் இருக்கலாம் முழு வலம் வரும் வழியில் சிவ பகவானின் அபிஷேக கோமுகம் உள்ளது நல்லதொரு நிலை இருக்கிறது பார்ப்பதற்கு திவ்யமாக இருக்கிறது மற்றும் பல தேவதைகளுக்கு சிறிய சிறிய சந்நிதிகள் உள்ளன இங்குள்ள நந்தியும் பார்க்கத்தக்க ஒரு உயரமான நந்தி கோவிலின் தேர் பற்றி கேட்கவே வேண்டாம் ஏற்கனவே அது பற்றி தனியாக ஒரு பிளாக் எழுதியுள்ளேன் ஜனவரியில் அதை அனுப்பி இருந்தேன் எப்போது இந்த தேர் சீரமைக்கப்படும் என்று தெரியாது ஆனால் இந்த தேரை தகர கொட்டகை போட்டு மூடி வைக்கலாமே அதற்கு நாம் அம்பானி யை எதிர்பார்க்க வேண்டுமா இது பற்றி நான் மேலும் தெரிவிக்கிறேன் இந்த இரண்டு கோவில் களுக்கும் தக்கார் கள் பொதுவே சிவாச்சாரியார் அவர்களும் ஒன்றே வெண்காடர்கோவில் பூஜைகளை முடித்துவிட்டு இங்கு வருகிறார் பின் அங்கு பகவான்ங்களுக்கு நெய்வேதியம் செய்கிறார் அபிஷேகங்கள் செய்வதாக தெரியவில்லை ஆனால் கை தட்ட வேண்டிய மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்க கூடியவிஷயம் என்னவென்றால் இங்கும் சிவ அன்பர்கள் பராமரிப்புகளை எடுத்துக் கொண்டுவிட்டார்கள் நான் சென்ற அன்று கோபுர வாசலில் கோபுரத்தின் கீழ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் இந்த கோவிலில் என்னுடைய அடுத்த புனர் தரிசனத்திற்கு முன் இது முடிக்கப்பட்டு விடலாம் நமச்சிவாய ஓம் நம மருந்தீஸ்வரா இதைப் படிப்பவர்கள் பார்ப்பவர்கள் நமசிவாய நமசிவாய என்று சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் வாழ்க நாதன் தாள்

No comments:

Post a Comment